Friday, September 14, 2007

சென்னைன்னு பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...

ஆசியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் ஏரியாவான சென்னை டி நகர் உஸ்மான் ரோட்டில் ஆட்டோ எங்களை துப்பிச் சென்றது.

சர் சர் என்று எங்குதான் இவர்கள் செல்வார்களோ என்று யோசித்தபடியே அந்த ஜனத்திரளுக்குள் நானும் என் குடும்பத்தினரும் (மனைவி 3 குழந்தைகளும்) நுழைந்தோம்.

நாயுடு ஹாலில் குளு குளு என்று இருந்தது. ஆகா இந்த வெயிளுக்கு இங்கேயே டேரா போட்டுவிடலாம் என்று என் மனது நினைத்தது.

என்னுடைய இரு பெண்களும் தேவலோகத்திற்குள் நுழைந்துவிட்டது மாதிரி அங்குமிங்கும் பரபரவென அலைந்தார்கள். என் மனைவி அவர்களை காஸ்மெட்டிக் பிரிவுக்கு கூட்டிசென்றார்.

என் அருகில் இருந்த 4 வயது நிரம்பிய என் பையன் தன் இனிய குரலால் அப்பா ஜூஸ்ப்பா... என்றான். அப்பாடா உட்கார ஒரு ஏசி கிடைத்ததே என்று இருந்த எனக்கு பகீர் என்று இருந்தது. வெளியே வந்து வேகாத வெயிலில் கொஞ்சமும் சுத்தமில்லாத அந்த ஜூஸ் சென்றில் சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக் குடித் தோம்.

சுலையாக 30 ரூபாய் காணமல் போனது. அப்படியே பராக்கு பார்த்தப்படி பிளாட்பாரத்தில் நடந்தோம். விதவிதமான மனிதர்கள் ஏதோ ஒன்றை அடைய பரபர என்று சென்றுகொண்டிருந்தார்கள்.

தீடிரென்று யாரோ ஒருவர் தொட்டு அழைப்பது போல் இருந்தது. திரும்பினேன். திடகார்த்திரமாய் ஒருவர், சார் ஒரு 5 ரூபாய் கொடுங்கள் என்று அதிகாரமாய்க் கேட்டார். வெளியூரிலிருந்து வந்த எனக்கு சென்னையின் இந்த புதுவித பிச்சை அதிர்ச்சியடைய வைத்தது.

மனதிலுள்ள பயத்தை மறைத்துக்கொண்டு சில்லரை இல்லப்பா என்றேன். என்னை மேழும் கீழுமாக ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வந்துட்டாங்க பர்சேஸ் பண்ண என்று சொல்லியிருப்பானோ என்று நினைத்தபடி வேகமாக நடையைக் கட்டினேன்.

கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து நாயுடு ஹாலுக்குள் நானும் என் பையனும் நுழைந்தபோது, என் மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு சின்ன பிரவுன் கலர் கவரை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

என்னம்மா அது என்றேன். பெரிய மகள் வேகமாக கவரை பிரித்துக் சின்னமாக ஒரு பாட்டிலை எடுத்துக் காண்பித்தாள். என்ன இது என்றேன். இது தாம்பா லேட்டஸ்ட்டாக வந்த நெயில் பாலிஸ் என்றாள். விலை கூட கம்மிதாம்பா, ஒன்லி 62 ரூபீஸ் என்றாள்.

ஏற்கனவே என் மகன் கொடுத்த டார்ச்சரில் டைரி மில்க்காகவும், சூஸ் ஆகவும் சுமார் 70 ரூபாய் காலியாய் இருந்தது. அத்தர் பாட்டில் மாதிரி இருக்கும் இதற்கு அறுபத்திரண்டா என்று மனம் தந்தி அடித்தது. குடும்பஸ்தனுக்கு இதெல்லாம் சகஜம் என்று தேற்றிக்கொண்டேன்.

எங்கம்மா அம்மாவைக் காணோம் என்றேன். அம்மா பர்ஸ்ட் பிளோரில் இருக்கும் சாரி சென்ட்டரில் இருக்காங்க, என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது என் இல்லாள் முகம் முழுக்க புன்னைகையுடனும், கை நிறைய பைகளுடனும் வந்தாள்.

வந்த வேகத்தில், நம்ம ஊரில் கூட இவ்வளவு சீப்பாக இருக்காதுங்க. இங்க ரொம்ப சீப்பா இருக்கு, அதே சமயம் குவாலிட்டியாகவும் இருக்கு. பார்த்தா நம்ப மாட்டீங்க நா எடுத்த 7 சேலையும், மேட்சிங் பிளசும் வெறும் ஏழாயிரத்து ஐந்நூறுன்னா உங்களால நம்ப முடியுதா? என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, எனக்கு பீ.பியினால் தலை சுத்துதா இல்ல இதைக் கேட்டதுனாலயா தெரியல.

ஒரு வழியா ட்ரைனில் மறுநாள் காலையில் ஊர் வந்து சேர்ந்தோம். ஒரு வெள்ளை பேப்பிரில் கணக்கு போட்டதுல போகுவரத்து ஆட்டோ, சூஸ் அது இதுன்னு பார்த்ததுல அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ரூபாய் 22332.50 பைசாதான் ஆச்சு. ஒன்லி 2 டேஸ் சென்னையில் இருந்ததோட எபக்ட்.

சென்னைன்னு பேரைக் கேட்டாலே இப்ப எனக்கு சும்மா அதிருதில்ல...

4 comments:

Anonymous said...

ஏன் உங்க ஊர்ல இல்லாத கடையா? எதுக்குங்க மெட்ராஸ¤..?

மெட்ராஸ¤க்கு வந்தோமா? பீச்சை பார்த்தோமா? சமாதியை பார்த்தோமா? ஷகிலா படம் பார்த்தோமான்னு இல்லாம.. ஷாப்பிங்ன்னு வந்துட்டு காசைப் பார்த்தா முடியுமா? வீட்டுக்குத்தான செஞ்சீங்க.. அப்படீன்னு சந்தோஷப்பட்டுக்குங்க..

')) said...

//மெட்ராஸ¤க்கு வந்தோமா? பீச்சை பார்த்தோமா? சமாதியை பார்த்தோமா? ஷகிலா படம் பார்த்தோமான்னு இல்லாம.. ஷாப்பிங்ன்னு வந்துட்டு காசைப் பார்த்தா முடியுமா? வீட்டுக்குத்தான செஞ்சீங்க.. அப்படீன்னு சந்தோஷப்பட்டுக்குங்க..//

நல்ல காமெடியா எழுதிருக்கீங்க.. தேங்க்ஸ்.. வீட்டுக்குத்தான்னு சொன்னாலும் பணம் பணம்தான.. செலவழிப்பதும், பின்பு புலம்புவதும்தான கணவன்மார்களின் வழக்கம்.. அதான்..

')) said...

எந்த ஊர்ல இருந்து சென்னை வந்தீங்க?....

')) said...

enge pochu ennoda comments?