Tuesday, September 11, 2007

ரசித்த உலக சினிமா

ரசித்த உலக சினிமா

ரூவாண்டா ஹோட்டல்

மனித உணர்வுகள் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் அழகிய
திரைப்படம் . இரண்டு பிரிவினர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அந்த ஊரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலைப்பார்க்கும் பால் என்பவர் எதிர் பிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்கிறார்।

அவர்களின் காதலின் சின்னமாக மூன்று குழந்தைகள்.தீடுரென ஏற்பட்ட இனப்பிரச்சனையால் பால் மனைவி வகையினரைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள்।மீதமுள்ளவர்கள் அடைக்கலம் தேடி, அந்த ஹேட்டலுக்கு வருகிறார்கள், கலவரக்காரர்களிடமிருந்து பால் அவர்களை காப்பற்றுவதே படம்.

சூழ்நிலைக் கைதிதான் நாம் அனைவரும் என்பதை வெகு அழகாக புரியவைக்கிறார்கள்।கலவரத்தால் குடும்பங்கள் சிதறும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன.

பிரச்சனைகளை பால் எதிர் கொண்டு சமாளிக்கும் விதத்தை நாம் நம் வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று.எந்த நிலையிலும் கலங்காமல் சூழ்நிலைக்கேற்றபடி நம்மை மாற்றிக்கொண்டு நம் இலக்கை அடையவேண்டும் என்ற பாடத்தையும் மறைமுக
மாக இப்படம் உணர்த்துகிறது।

படத்தின் இறுதிக்காட்சியில் பால் மனைவி சகோதரின் குழந்தையை அகதிகள் முகாமில் தேடி மீட்டெடுக்கும் காட்சி கல் நெஞ்சக்காரர்களை
யும் கண்ணீர் சிந்தவைக்கிறது।

அதைத்தொடர்ந்து வரும் பாடல் நம் மனதை இனம்தெரியா வேதனையில் ஆழ்த்துகிறது।

நம் வாழ்க்கை இவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாகவே கொடுத்துள்ளான் ஆண்டவன் என்று நினைக்கத் தோன்றுகிறது।

வாழ்க்கை வாழ்வதற்கே। இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொண்டால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும்।

1 comments:

Anonymous said...

//வாழ்க்கை வாழ்வதற்கே। இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொண்டால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும்।//

உண்மைதான்.. வருகின்ற போது வரட்டும் காலன். அதுவரையில் வாழ்க்கையை ரசிப்போம் என்ற உணர்வுதான் நமக்கு வேண்டும்.

இந்த அருமையான திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகவே விமர்சனம் செய்திருக்கலாம்..