Tuesday, September 11, 2007

மைக்ரோ கதை

மைக்ரோ கதை

ஒரு விவசாயக் கல்லூரி மாணவன் கிராமத்துக்குச் சென்றான்। அங்கு ஒரு விவசாயியைச் சந்தித்துச் சொன்னான்:

''உங்கள் விவசாய முறைகள் காலம் கடந்தவை।நான் சொல்வது போல் விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாய முறைகளை செய்தால் இதோ இந்த மரத்திலிருந்து நீங்கள் ஆண்டுக்கு நூறு மூட்டை ஆப்பிள் கிடைக்கிற ஆச்சிரியத்தை அடைவீர்கள்.''

''ஆமாம்... ஆச்சிரியமடைவேன்।''

"என்ன சொல்கிறீர்கள்। நான் கூறுவதை ஒப்புக்கொள்கிறீர்களா?'' என்றான் மாணவன்.

விவசாயி சொன்னார்,''ஆமாம் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்। இந்த பேரிக்காய் மரத்தில் ஆப்பிள் காய்த்தால்...''

கொசுறு கடி :

சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ் கல்கத்தா சிட்டியில் வாழலாம். ஹைதராபாத் சிட்டியில வாழலாம். எலக்ட்ரிசிட்டியில வாழமுடியுமா?

0 comments: