Tuesday, September 18, 2007

எல்லோருக்கும் பொதுவாய் நன்றி!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனை முறை நன்றியை வெளிப்படுத்துகிறோம்...?

யோசித்துப் பார்த்தால் நன்றியை கெட்ட வார்த்தையாக பாவித்து...

நன்றி மறந்த மனிதர்களாக மாறி...

நன்றியை ஒரு முறைக்கூட வெளிப்படுத்துவதில்லை என்று...

வெட்கப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும்...

இதனால் சகலமானவர்களுக்கும்...

சாலையில் வாகன போக்குவரத்தை சரிசெய்யும் மனிதருக்கும்...

தெருவில் குப்பைகளை கூட்டிப் பெருக்கும் மனிதருக்கும் ...

தபால் பட்டுவாடா செய்யும் மனிதருக்கும்...

காலையில் நாளிதழை வினியோகிக்கும் சிறுவனுக்கும்...

தேவையான நேரத்தில் தேவைப்படும் உதவியை செய்யும் நம் நண்பருக்கும்...

வீட்டு வேலைகளை செய்யும் பணியாளுக்கும்...

வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டியையாவது ஒழுங்காக கட்டும் மனிதருக்கும்...

அவ்வப்போது நம் பெற்றோருக்கும்...

கூச்சம் பார்க்காமல் நம் குழந்தைகளுக்கும்...

அன்றாடம் நம் மனைவிக்கும் என...

ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி நன்றி சொல்லப் பழகுவோம்.

6 comments:

Anonymous said...

நன்றி சொல்வதிலும்கூட ஒரு விஷயம் இருக்கிறது. இதையும் ஞாபகப்படுத்தினால்தான் நடக்கும் போல..

')) said...

வெளிநாடுகளில் அம்மா, அப்பா, தெரிந்தவர்கள், உறவினர்கள் பிறந்த நாளுக்கு கிரீட்டீங்ஸ் கார்டு கொடுத்து வாழ்த்துவது ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது என்பதை நான் பார்த்த அநேக வெளிநாட்டுத் திரைப்படங்களிலிருந்து தெரிந்து கொண்டேன்..

அதை நாமும் பின்பற்ற வேண்டும். நன்றி சொல்வதுகூட ஒரு நன்றிதானே..

')) said...

இந்த பதிவுக்கு கொஞ்சம் சம்பந்தம் உள்ள கதை

எமனுடன் கொஞ்ச நேரம்

Anonymous said...

ETHU ORU GILMA MATTER

')) said...

//PPattian : புபட்டியன் said...
இந்த பதிவுக்கு கொஞ்சம் சம்பந்தம் உள்ள கதை : எமனுடன் கொஞ்ச நேரம்..//

Yes.. Very interesting Story Ppattian..

Thank you..

')) said...

//Anonymous said...
ETHU ORU GILMA MATTER//

Ethukku enna Aartham anonymous..?