Friday, September 7, 2007

இன்றைய தலைப்புச் செய்திகள்

தினகரன்-07-09-2007

இன்றைய தலைப்புச் செய்திகள்

ரஜினி, கமலுக்கு திரைப்பட விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவுடன் கூட்டுப் போர் பயிற்சிக்கு கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புநாடாளுமன்ற வளாகத்தில் எம்।பி.க்கள் தர்ணா

உச்சநீதிமன்றத்தில் தடை பெறத விளம்பரப் பலகைகளை அகற்றலாம்।உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை வரும் 19ம் தேதி சி।ஐ.டி.யூ நடத்துகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கில் பதவி உயர்வு।

அஞ்சல் துறை பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி ஒன்றை நடத்துகிறது।

அனுமதி இல்லாத இடங்களில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை। - தமிழக அரசு உறுதி.

சிவில் நீதிபதிகளுக்கான வயது வரம்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி।

வாரிசுதாரர்களுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது।

I।C.F.-ல் லஞ்சம் வாங்கிய ஊழியரைப் பிடித்த சி.பி.ஐ.அதிகாரிகள் சிறை வைப்பு. போலீஸார் வந்து சி.பி.ஐ.யினரை காப்பாற்றினர்.

ஜம்போ பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடங்கியது। முதல் பாஸ்போர்ட்டை நடிகர் கார்த்தி பெற்றுக் கொண்டார்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிஸில் 4 உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்।

உலகிலேயே பழமையான ·பேரி குயின் ரயில் இன்ஜின் சென்னையில் வெள்ளோட்டம் விடப்பட்டது।

தவறான மாத்திரையை சாப்பிட்டுவிட்டேன்। தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை - தடகள வீராங்கனை சாந்தி தகவல்.

16 நிறுவனங்களுடன் இணைந்து கல்வி, மருத்துவ வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - இண்டல் நிறுவனம் அறிவிப்பு।

கூடலூர் மலையில் தரையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம்.
சினிமா இயக்குநர் சரண் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான ஆர்ட் டைரக்டரின் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை।

மாபெரும் கட்சியை வழிநடத்தும் எனக்கு பூச்சாண்டி காட்டுகிறார் கருணாநிதி-ஜெயலலிதா அறிக்கை।

ஜெயலலிதாவுக்கு நன்றி-கருணாநிதி அறிக்கை।

ராமதாஸ் கோரிக்கைக்குப் பதில் - சமச்சீர் கல்வி முறை அடுத்தாண்டு அமலாகும் - கருணாநிதி அறிக்கை।

பண்டிகைகளை முன்னிட்டு ரேஷனில் பருப்பு, எண்ணெய் ஜனவரிவரை வாங்கலாம்।

உத்தரகாண்டில் கடும் மழை। நிலச்சரிவில் சிக்கி 15 பேர் மண்ணில் புதைந்தனர்.

சர்ச்சைக்கு உள்ளான ஓவியர் உசைனுக்கு விருதா? கேரள அரசுக்கு எதிர்ப்பு॥

ஜன்மாஷ்டமி விழா டி।சர்ட்டில் குஜராத் முதல்வர் மோடி கிருஷ்ணராக சித்தரிப்பு.

இஸ்ரோ நிலம் வாங்கிய விவகாரம் - எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் கேரள சட்டப் பேரவை ஒத்தி வைப்பு।

தாறுமாறாக காரை ஓட்டி 7 பேர் பலியான வழக்கு-தொழில் அதிபர் அலிஸ்டர் பெரைராவுக்கு 3 ஆண்டு ஜெயில்। மும்பை கோர்ட் தீர்ப்பு.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நீதிபதிகளை விசாரிக்கும் மசோதா। உயர்நீதிமன்றங்கள் கடும் எதிர்ப்பு.

95% சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள் - குடும்பத்துக்கு ஒருவர் ஆசிரியர் - குஜராத்தில் ஒரு அதிசய கிராமம்।

அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய நாடாளுமன்றக் கூட்டுக் குழு - பாரதிய ஜனதா வலியுறுத்தல்।

அணு ஒப்பந்த விவகாரம் -- கூட்டுக் குழு பரிந்துரையை அரசு நிராகரிக்க முடியாது -- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதி।

புதிய பெரியாறு அணை கட்ட நிதி திரட்ட கேரள அரசு முடிவு - கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன் தகவல்।

ஊதிய உயர்வு இல்லாததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா அதிகரிப்பு -- 3 ஆண்டுகளில் 392 பேர் விலகல்।

விரைவில் கடற்படை சோதனை - நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை தயார்।

ராணுவ மேஜர் ஜெனரல் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு।

நாடு முழுவதும் 90 மாவட்டங்களில் சிறுபான்மை மக்களுக்காக சிறப்புத் திட்டம்। மத்திய அரசு அறிவிப்பு.

ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி இம்ரானிடம் 2-வது நார்கோ சோதனை -- மேலும் 10 பேர் சிக்கினர்।

பா।ஜ.க.வுடன் இனி உறவு இல்லை - மம்தா பானர்ஜி அறிவிப்பு.

மக்கள் தொலைக்காட்சி 2-ம் ஆண்டு துவக்க விழா।

சோனியாவை விமர்சித்த வழக்கு - உயர்நீதிமன்ற கிளையில் ஜெயலலிதா மனு - விசாரணை தள்ளி வைப்பு।

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரம நெரிசலில் 11 பேர் பலி।

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப் பணி கட்டாயமா?- மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு।

நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக காளியப்பன் நியமனம்।

நடிகர் சங்கத் தலைவர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார்।

ஆசிய கோப்பை ஹாக்கி। அரை இறுதிக்கு ஜப்பான் தகுதி. வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.

ஓவலில் அபார ஆட்டம் - பாராட்டு மழையில் ராபின் உத்தப்பா।

பெயர் குழப்பத்தால் ஆள் மாறாட்டம் - அப்பாவி பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை।

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிவி நடிகர் பிரட் தாம்ஸன் போட்டி।

நேபாள ரூபாயில் மன்னர் படம் நீக்கம்।

அதிபர் பதவியில் இருந்து அக்டோபர் 15-ல் முஷாரப் ராஜினாமா।

அந்தமானுக்கு கடத்த இருந்த ரூ।50 லட்சம் அபின் பாரிமுனையில் பறிமுதல்.

வரும் 15-ம் தேதிவரை வாக்காளர் பட்டியலுக்காக புகைப்படம் சமர்ப்பிக்கலாம் - இதுவே இறுதி வாய்ப்பு।

சென்னை பல் மருத்துவனையில் திடீர் மின் தடை - நோயாளிகள் தவிப்பு।

தமிழக இளைஞர் காங்கிரஸ¤க்கு 15 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி தீவிரம் - தேர்தல் பொறுப்பாளர் தகவல்।

மருத்துவ மாணவர்கள் விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறை - இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்।

போலீஸில் ஆஜரான 30 நிமிடத்தில் பூட்டிய வீட்டை உடைத்து கைவரிசை காட்டியவர் கைது।

இரட்டைக் கொலை வழக்கில் விடுதலையானவருக்கு 10 ஆண்டு சிறை - அப்பீல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு।

பணம் கேட்டு மிரட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை।

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு - கணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை।

பெண்ணின் ஜாக்கெட்டைக் கிழித்த அ।தி.மு.க. பெண் பிரமுகர் உட்பட 3 பேர் கைது.

காதல் மனைவியை மீட்டுத் தர வாலிபர் போலீஸில் புகார்।

மண்ணெண்ணெய் அளவு குறைந்ததால் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்।


பிட் நியூஸ் : சென்னை பரங்கிமலை ஜோதி தியேட்டரில் “புதுசா ஒரு அனுபவம்” - சிந்து, பாபிலோனா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம். தினசரி 4 காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

7 comments:

Anonymous said...

எப்படிங்க இப்படி..? ஏதாவது ஒரு மேட்டரை மட்டும் முழுசா எழுதிட்டு விட்ருக்கலாம். டைம் வேஸ்ட்..

')) said...

//எப்படிங்க இப்படி..? ஏதாவது ஒரு மேட்டரை மட்டும் முழுசா எழுதிட்டு விட்ருக்கலாம். டைம் வேஸ்ட்..//

இதையெல்லாம் பார்த்தா எழுத முடியுமா? ஒரு வித்தியாசத்திற்குத்தான் இப்படி.. வேற ஒண்ணுமில்ல.. வருகைக்கு நன்றி அனானி..

Anonymous said...

இரண்டாம் சாணக்கியன் சார்,
உங்களுக்கு டோண்டு சாரின் நண்பர்களான சர்வெண்டிஸ், ஹாரி, நாட்டாமை, பஜ்ஜி, சொஜ்ஜி, கட்டபொம்மன் ஆகியோரை தெரியுமா ?

')) said...

தெரியும்.. ஆனால் பார்த்ததில்லை..

Anonymous said...

உங்கள்வீட்டு நங்கநல்லூர் ஹிந்து காலனியாமே?

')) said...

//வேகாதவன் said...
உங்கள்வீட்டு நங்கநல்லூர் ஹிந்து காலனியாமே?//

வேகாதவன்.. ("பேரை பாரு, அப்படியே சுடுகாட்டுல பாதி எரிஞ்சிட்டிருந்த பொணம் எந்திரிச்சு வந்த மாதிரி.." உபயம் : நன்றி திரு.சுகுணா திவாகர்)

கண்ணுக்கு கண்ணாடி போடுங்க.. காமாலை கண்ணுக்கு காணுறதெல்லம் மஞ்சளாத்தான் தெரியுமாம்..

Anonymous said...

//பிட் நியூஸ் : சென்னை பரங்கிமலை ஜோதி தியேட்டரில் “புதுசா ஒரு அனுபவம்” - சிந்து, பாபிலோனா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம். தினசரி 4 காட்சிகள். காணத் தவறாதீர்கள்.//

அப்ப வாரா வாரம் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா..? இது மேட்டரு..