Friday, September 7, 2007

பொறியியல் கல்லூரிகள்-இந்த வருட நிலைமை

பொறியியல் கல்லூரிகள்-இந்த வருட நிலைமை


பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவு பெற்றன।

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், ப்ளஸ்டூ படிப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதாலும் பெரும்பாலான கல்லூரிகளில் பெருமளவு இடங்கள் நிரம்பியுள்ளது।

மொத்தமாக எட்டாயிரம் இடங்களே காலியாக உள்ளன। இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட குறைவு என்பதே ஆச்சரியம்தான்.

பி।இ।, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 18-ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு ஜூலை 18-ம் தேதியும், பிளஸ்டூ படிப்பின் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஜூலை 19 முதல் 21 வரையிலும், வெளி மாநில மாணவர்களுக்கு ஜூலை 22 முதல் 24ம் தேதி வரையிலும் கவுன்சிலிங் நடைபெற்றது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 23ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 கல்லூரிகள், 10 அரசு கல்லூரிகள், 255 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 63 ஆயிரத்து 751 இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெற்றது।

இதில் முதற்கட்டத்தில் 20 ஆயிரத்து 231 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 21 ஆயிரத்து 968 மாணவர்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 11 ஆயிரத்து 238 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன।

கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் முதற்கட்டத்தில் 4,969 மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் 11619 மாணவர்களும், மூன்றாம் கட்டத்தில் 14321 மாணவர்களும் என மொத்தம் 14,331 மாணவர்களும் என மொத்தம் 30,919 மாணவர்கள்(36,41 சதவிகிதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை।

மேலும் கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் முதல் கட்டத்தில் 131 மாணவர்கள், இரண்டாம் கட்டத்தில் 200 மாணவர்கள், மூன்றாம் கட்டத்தில் 227 மாணவர்கள் என 558 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்யவில்லை।

இதையடுத்து நடைபெற்ற பிளஸ்டூ துணைத் தேர்வு மூலமாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் 390 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன। இதையடுத்து 9,924 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

பிளஸ்டூ படிப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்காக கூடுதலாக 1800 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன। இந்த இடங்களுக்காக நடைபெற்ற கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்த இடங்களே நிரப்பப்படாமல் உள்ளன।

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், பிளஸ்டூ படிப்பில் தொழிற் கல்வி மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டதும்தான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது।

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது இனிமேல்தான் தெரிய வரும்। சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி. ஆகிய மூன்று கல்லூரிகளில் நூறு சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன.


இத்துடன் சென்னையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி ஈஸ்வரி பொறியியல் கல்லூரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரிஎம்।என்।எம்.ஜெயின் பொறியியல் கல்லூரி செயிண்ட் ஜோஸப் பொறியியல் கல்லூரி ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. கோவை தொழில் நுட்பக் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், தஞ்சை ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி தஞ்சை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் ஸ்ரீசிவசுப்ரமணியநாடார் பொறியியல் கல்லூரி வள்ளியம்மை பொறியியல் கல்லூரி கிருஷ்ணகிரியில் உள்ள பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, விருதுநகர் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி என மொத்தம் 23 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நூறு சதவிகித இடங்கள் நிரம்பிவிட்டன.


மேலும் 63 கல்லூரிகளில் 95 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன।

நாமக்கல் சி।எம்.எஸ் பொறியியல் கல்லூரி கன்னியாகுமரி ஜெயமாதா பொறியியல் கல்லூரி திருநெல்வேலி ஜோசுரேஷ் பொறியியல் கல்லூரி சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி ராஜாஸ் பொறியியல் கல்லூரி நாமக்கல் உதயா பொறியியல் கல்லூரி கன்னியாகுமரி லார்டு ஜெகன்நாத் பொறியியல் கல்லூரி கே.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரி நாகர்கோவில் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி பாளையங்கோட்டை பி.எஸ்.என். பொறியியல் கல்லூரிஆகிய 10 கல்லூரிகளில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் 3 கல்லூரிகள், திருச்சி அண்ணா பல்கலக்கழகக் கட்டுப்பாட்டில் 7 கல்லூரிகள், கோவை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் 11 கல்லூரிகள் என மொத்தம் 21 புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது।

வரும் 10ம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வகுப்புகள் துவங்கவுள்ளனவாம்.

4 comments:

Anonymous said...

//நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், ப்ளஸ்டூ படிப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதாலும் பெரும்பாலான கல்லூரிகளில் பெருமளவு இடங்கள் நிரம்பியுள்ளது।//

நானும் இதைத்தான் நம்புகிறேன்.. மேலும் இந்தாண்டு முதல் வங்கிகள் கல்விக் கடனை பரவலாக வழங்க முன் வந்திருப்பதும்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.. நல்ல முன்னேற்றம்தானே..

')) said...

//நானும் இதைத்தான் நம்புகிறேன்.. மேலும் இந்தாண்டு முதல் வங்கிகள் கல்விக் கடனை பரவலாக வழங்க முன் வந்திருப்பதும்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.. நல்ல முன்னேற்றம்தானே..//

முன்னேற்றம்தான். தனியார் கல்வி நிறுவன அதிபர்களுக்கும், கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும்.. கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் பட்டை நாமம்தான்..

Anonymous said...

பொறியியல் என்று ஆரம்பித்தாலே அது நோண்டு சார்தான். எங்கிட்டயே கதை விடுறீங்களே. கொண்டையை நல்லா மறைச்சால் என்ன?

')) said...

//Anonymous said...
பொறியியல் என்று ஆரம்பித்தாலே அது நோண்டு சார்தான். எங்கிட்டயே கதை விடுறீங்களே. கொண்டையை நல்லா மறைச்சால் என்ன?//

பாவங்க அவரு.. என்னிக்கோ ஒரு நாள் அவர் நானில்லை.. நானில்லை அவர்ன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க.. ஓடிருவீங்களா..? மேட்டர் என்ன எழுதிருக்கேன்றதை பார்ப்பீங்களா..?

என்னால் ஏற்படும் சிரமத்திற்கு டோண்டு அவர்கள் மன்னிக்க வேண்டும்.