Thursday, August 23, 2007

கவியரசர் கண்ணதாசன் சொன்ன உண்மை

கடந்த சில நாட்களுக்கு முன் 'பெரியார்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய கலைஞர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி।மு.க. வெற்றி பெற்றதற்காக॥ அவ்வெற்றிக்கு அரும்பாடுபட்டவன் என்ற முறையில் தனக்குப் பரிசளிப்பதற்காக அண்ணா அவர்கள் கடை கடையாக ஏறி இறங்கி மோதிரம் ஒன்றை வாங்கி வந்து கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் தனக்கு அணிவித்ததாக பல்லாண்டு காலமாக சொல்லி வரும் ஒரு கதையைச் சொன்னார்..


ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கவியரசர் கண்ணதாசன், தனது 'வனவாசம்' நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்।

நீங்கலும் படித்துப் பாருங்க॥

கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' புத்தகத்தில் 277-ம் பக்கம்

தலைப்பு : 47। கணையாழியும், கசப்பும்

(குறிப்பு : இங்கே 'அவன்' என்று கண்ணதாசன் தன்னைத்தானே குறிப்பிட்டுக் கொள்கிறார்)


"கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார்। அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார்। இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்।

அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்। காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.

"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை। எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்॥" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.

பெரிய ஜாதிக்காரனையும், சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்।

அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார்। அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

அவன் நேரே அவரிடம் போனான்। "என்ன அண்ணா॥ இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.

"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு। அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்॥" என்றார்.

"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா॥?" என்று அவன் கேட்டான்।

"அட சும்மா இரு॥ அடுத்தத் தேர்தல் வரட்டும்। பார்த்துக் கொள்ளலாம்.." என்றார்.

அவன் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நடக்கலானான்।

அவன் கண்களில் நீர் மல்கிற்று। பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும் உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.

கட்சியிலும் அண்ணாதுரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பி நெல்லின் உமி சிறிது நீங்குவது போல நீங்கத் தொடங்கிற்று..."

அண்ணா உயிருடன் இருந்தபொழுதே 1961-லேயே இந்தப் புத்தகம் வெளிவந்துவிட்டது। தான் இறக்கின்றவரையிலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் அண்ணா கருத்து சொல்லவில்லையாம். காரணம், அவ்வளவு 'உண்மை'கள் இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

பதிப்பகம் : வானதி விலை ரூ.60.००

பின்குறிப்பு : கலைஞரும் இந்தப் புத்தகத்தைத் தான் இதுவரை படித்ததே இல்லை என்றே சாதித்து வருகிறார்.

15 comments:

Anonymous said...

கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?

')) said...

//கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?//

அதானே!

கேள்வி :சென்னை மாநகராட்சி தேர்தலிலே கலைஞரை விட கண்ணதாசன் தான் அதிகமாக உழைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: அதான் கண்ணதாசனே சொல்லியிருக்கிறாரே!

')) said...

//நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.//

தான் கொண்ட நிலையில் மாறாமல் இருந்ததால் கலைஞர் எங்கேயோ போய்விட்டார்.
நிலை மாறியதால் கண்ணதாசன் எங்கேயோ போய்விட்டார்.

')) said...

கவியரசின் கொள்கை நிலைப்பாடும் கருத்தில் வழுவாது நிற்கும் உறுதியும் நாடறிந்த ஒன்று.

பகுத்தறிந்து அர்த்தமுள்ள இந்துமதமும், பல்வேறு மதஆராய்சிகளையும் முன்னெடுத்து சென்ற பக்திப்பழம் அவர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் கண்ட அண்ணா கவியரசை புறக்கணித்தார் என்பது "கோப்பையிலே குடியிருந்த வேளையில்" உதித்த சிந்தனையே.

இது இவன் கண் விடுதலில் அண்ணா சிறந்தவர் என்பதால் கவியரசை அவர் முன்னிலை படுத்தவில்லை.

கவியரசு, அந்த காலத்து டி.விஜயராசேந்தர்.

')) said...

இப்படி எல்லாம் பொய் சொல்லி பெயர் வாங்க வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு இருந்ததாக தெரியவில்லை.

தன்னைப் பற்றி கூட பல விஷயங்களை பகிரங்கமாக சொன்னவர் அவர். . . . . .

********************************
கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?
********************************

இந்த விஷத்தை கலைஞரா மறுப்பார் . . . .?

')) said...

கருணாநிதியின் சுயமுன்னேற்றத்துக்கு எதுவும் செய்யும்;தன்மையை விளக்க இந்தச் சம்பவம் ஒரு வாழும் அரசியல் வாதியால் குறிப்பிடப்பட்டதைப் படித்துள்ளேன்.
கருணாநிதி சுயநலத்துடன்; தன் நிலைக்குப் பங்கம் வரக்கூடியவர்களை ;ஓரங்கட்டி ஓடவைப்பதில் மன்னவர்.
இப்போ கூட; பொதுச் சபை முடிவு என நாசூக்காக குடும்பத்தையே முன்னுக்குத் தள்ளுகிறார்.
ஏன் இன்னும் மனைவிமாருக்கு பதவி ஒதுக்காமல் இருக்கிறாரோ தெரியவில்லை.
இதையெல்லாம் சாணாக்கியம் என மயிர் சிலிற்கக் கூடாது.
கொள்கை; மஞ்சள் துண்டு; கும்குமப் பொட்டு; சாயிபாபா...பல்டிக்கு இவரும் குறைந்தவரில்லை.
எனினும் அண்ணா மேடையில் அலைந்து திருந்தி மோதிரம் வாங்கினேன் எனச் சொல்லியிருக்க வேண்டுமா???
அவரும்; அவர் குடும்பமும் எங்கேயோ போறாங்க....நாம வீணா அடிச்சுக் கொள்கிறோம் போல உள்ளது.

Anonymous said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கருணாநிதியின் சுயமுன்னேற்றத்துக்கு எதுவும் செய்யும்;தன்மையை விளக்க இந்தச் சம்பவம் ஒரு வாழும் அரசியல் வாதியால் குறிப்பிடப்பட்டதைப் படித்துள்ளேன்.
//

இந்த திமிருனால தான்யா நாடில்லாம நாடு நாடா அனாதையை திரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. தமிழ்நாட்டு விழயம் எல்லாம் உமக்கு தேவையில்லாதது. தேவையில்லாத விழயத்தை பேசி வாங்கி கட்டிகொள்ள வேண்டாம்.

')) said...

பெயர் போடத் திமிர் அற்ற நீர்..
எங்கள் திமிரைப் புரிந்து கொண்டதற்கு நன்றி!

"நீரளவே ஆகுமாம்.......

')) said...

//Anonymous said...
கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?//

எனக்கும் இதுதான் ஆச்சரியம்.. கண்ணதாசனின் மேல் மதிப்பு வைத்திருப்பவர்கள் இதை முழுமையாக நம்புகிறார்கள். நான் உட்பட..

')) said...

///ஜோ / Joe said...
//கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?//
அதானே!
கேள்வி :சென்னை மாநகராட்சி தேர்தலிலே கலைஞரை விட கண்ணதாசன் தான் அதிகமாக உழைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்: அதான் கண்ணதாசனே சொல்லியிருக்கிறாரே///

ஜோ.. சீரியஸாகப் பேசுகிறீர்களா இல்லையா என்று எனக்குச் சந்தேகம். ஆனால் கண்ணதாசன் எழுதியதில் எனக்குச் சந்தேகமில்லை..

')) said...

///ஜாலிஜம்பர் said...
//நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.//
தான் கொண்ட நிலையில் மாறாமல் இருந்ததால் கலைஞர் எங்கேயோ போய்விட்டார்.
நிலை மாறியதால் கண்ணதாசன் எங்கேயோ போய்விட்டார்.///

அதனால்தான் லட்சக்கணக்கான தமிழர்களைத் தாய்போல் தினமும் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.. நன்றி ஜாலிஜம்பர்..

')) said...

இசை மேலே சொன்னவர்களுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்..

')) said...

//வெங்கட்ராமன் said...
இப்படி எல்லாம் பொய் சொல்லி பெயர் வாங்க வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு இருந்ததாக தெரியவில்லை.
தன்னைப் பற்றி கூட பல விஷயங்களை பகிரங்கமாக சொன்னவர் அவர். . . . . .
********************************
கண்ணதாசன் ஒருவர்தானே இதை மறுத்திருக்கிறார்.. மற்றவர்கள்..?
********************************
இந்த விஷத்தை கலைஞரா மறுப்பார் . . .//

மறக்க மாட்டார். மறக்கவும் முடியாது.. அதனால்தான் வனவாசத்தை நான் படிக்கவேயில்லை என்கிறார்..

')) said...

யோகன் ஸார்..

கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் கீழே உள்ள அனானி சொல்லியிருக்கும் பதில் என்னவென்று எனக்குப் புரியவில்லை..

Anonymous said...

டோண்டு ராகவன் புதுப்பேரிலே கெளம்பிட்டாண்டோய்!