Sunday, August 12, 2007

உலக வங்கியிடம் அதிக கடன் இந்தியாவுக்கு முதல் இடம்

இந்தியாவுக்கு கடந்தாண்டு வழங்கியதைவிட இந்த ஆண்டில் 169 சதவீதம் கூடுதலாக கடன் வழங்கியுள்ளது உலக வங்கி.

இந்தியாவுக்கு இந்த ஆண்டில் சலுகை அடிப்படையிலான சர்வதேச மேம்பாட்டு கூட்டமைப்புக் கடனாக ரூ.9512 கோடியும், மறு கட்டமைப்பு மேம்பாட்டு கடனாக ரூ.6150 கோடியும் ஆக மொத்தம் ரூ.15,662 கோடியை உலக வங்கியிடம் இருந்து இந்தியா கடனாகப் பெற்றுள்ளது.

உலக வங்கியிடம் இதுவரை இந்த அளவு பெரிய தொகையை வேறு எந்த நாடும் கடனாகப் பெற்றதில்லை. அதே போல் உலக வங்கியின் தனியார் முதலீட்டுப் பிரிவு இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2780 கோடி வழங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் உலக வங்கி கடன் மூலம் இரண்டு பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழகத்துக்கு நீர் நிலைகள் புனரமைப்பு, புதுப்பிப்பு, புதிதாக நிறுவுதல் போன்ற பணிகளுக்காக ரூ.1845 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு ரூ.775 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.259 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் பீகாரின் கிராமப்புறங்களில் சுய நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

உலக வங்கி கடனில் கிராம கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடன்களில் மூன்றில் ஒரு பகுதி இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் மேலும் ரூ.260 கோடி கடனை இந்தியாவுக்கு உலக வங்கி அனுமதித்துள்ளது.

ஆந்திரா அரசின் கிராம ஏழ்மை ஒழிப்புத் திட்டத்துக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 57 லட்சம் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள கடன் தொகை மூலம், ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் அவர்கள் சுய சார்பு அடைவர் என்றும் உலக வங்கி சொல்கிறது.

வாங்குங்க.. வாங்குங்க.. வாங்கிக்கிட்டே இருங்க..

கட்டப் போறது எப்படியும் நீங்க இல்லையே.. நாங்கதான..

0 comments: