Tuesday, August 14, 2007

கேபிள் டிவி தொழில்-அரசு ஜெயிக்குமா?

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற பெயரில் புதிய அரசு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கம்பிவட தொலைக்காட்சி சேவையை தமிழக அரசு தொடங்குவது சம்பந்தமாக கடந்த 11-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் "அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்" என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரைத் தவிர நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலாளர், எல்காட் நிர்வாக இயக்குநர், மின் வாரியத் தலைவர் கியோர் இயக்குநர்களாகப் பணி புரிவார்கள். இந்தப் புதிய அரசு நிறுவனம், தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் என்றும் அரசு ணையிட்டுள்ளது..." - இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாதம் 5 கோடி ரூபாய் வருவாய் தரும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற முன்னாள் பேரன்களின் சாம்ராஜ்யத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக தமிழக முதல்வரின் கண் ஜாடையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எது ஜெயிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வரும் என்றாலும், இப்போதைக்கு முன்னாள் பேரன்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வீடு நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை காட்டும் டிடிஹெச் தொழில் நுட்பத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.

தங்களது டிடிஹெச் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய்விட்டால் அரசின் கேபிள் டிவி திட்டம் தோற்றதுபோல் ஆகிவிடுமே என்பதால், வினையை வினையாலே அறுப்போம், வாயால் வேண்டாம் என்று அடக்கமாக இருக்கிறார்கள்.

அவர்களின் முயற்சியிலும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் அரசே கேபிள் டிவி நடத்தினாலும் கட்டணச் சேனல்கள், தங்களது கட்டணங்களை இனிமேல் குறைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆளும் கட்சியின் அடிப்படைத் தொண்டராக இருக்கும் ராஜ்டிவியே, தனது கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்தில் இருக்கிறது.

அப்படியிருக்கும்பொழுது அனைத்து சேனல்களையும் மக்களுக்கு வழங்கவேண்டுமெனில் அரசு மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 175 ரூபாயையாவது வசூலித்தே தீர வேண்டும். அல்லாமல் கட்டணச் சேனல்கள் அல்லாத சேனல்களை மட்டுமே வழங்குவோம் என்று கூறினால் வெறும் 100 ரூபாய்க்குள் கேபிள் டிவி கட்டணத்தை அடக்கிவிடலாம்.

அப்படிச் செய்யும்பட்சத்தில் அரசு தரப்பு இல்லாத கேபிள் டிவி நிறுவனங்கள் கட்டணச் சேனல்களையும் போட்டி காரணமாக அரசுத் தரப்புக் கட்டணத்திலோ அல்லது அதைவிட சிறிய தொகை உயர்விலோ பொதுமக்களுக்கு வழங்க முன் வந்தால் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெளிவாகவில்லை.

காரணம், தமிழகம் முழுவதும் அரசு மட்டுமே கேபிள் டிவி தொழிலைக் கையாளும் என்றோ, அரசிடம் இருந்துதான் மற்ற இடைநிலை முகவர்கள் கனெக்ஷன்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்பதையும் அரசுத் தரப்பு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

ஆக, அரசும், தனியாரும் இந்தத் துறையில் போட்டியிட ஆரம்பித்தால் நிச்சயமாக தனியார் துறைதான் ஜெயிப்பார்கள்.

காரணம், ஆட்சி மாற்றம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும் நடக்கும் என்பதால் தனியார் துறையினர் தங்களது கட்டணங்களை அரசுகளுக்காகக் குறைத்துக் கொண்டு ஒரு அரசு நல்ல பெயர் எடுக்க ஒத்துழைப்பார்கள் என்பதை நம்ப முடியாது. அதே போல் அரசுகளும் அந்தச் சேனல்களை ஒரு அளவுக்கு மேல் நெருக்கவும் முடியாது. காரணம், மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கம் அப்படி.

ஏற்கெனவே சென்னையில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளாக நம்பப்படும் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு போன்ற இடங்களில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கம்தான் அதிகம்.

இந்தப் பகுதிகளில் தனியார் துறையிடம் அரசுத் துறையும் போரிட வேண்டுமெனில் அவர்களும் கட்டணங்களை உயர்த்தித்தான் தீர வேண்டும்.

அதே சமயம் அந்த இடத்தில் இருக்கும் குடிசை வீடுகளில் இருக்கும் வாக்காளர் பெருமக்களை மனதில் வைத்துக் கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.

11 comments:

Anonymous said...

இரண்டாம் சாணக்கியரே.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.. எடுத்த எடுப்பிலேயே அரசியலா..? பார்த்து நடந்துக்குங்க.. ஆனாலும் உங்களது கருத்தில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது.

Anonymous said...

அதுதான் சொல்லிவிட்டார்களே.. தலைக்கு மேல் கேபிள்கள் இருக்கக்கூடாது. தரைக்கு அடியில்தான் என்று.. தரைக்கு அடியில் என்றால் அது அரசினால் மட்டுமே முடியும். சுற்றி வளைத்து அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கிறது அரசுத் தரப்பு. வேறு வழியில்லை.. சுமங்கலிக்கு அரோகராதான்..

')) said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இங்கேயும் போலியா..?

இரண்டாம் சாணக்கியரே.. இங்கு உண்மைத்தமிழன் என்ற பெயரில் வந்திருப்பது போலியார்.. இதுவெல்லாம் என்னவென்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.. அதை நீக்கி விடுங்கள்..

')) said...

டாஸ்மாக் கதையை மறுபடி நிகழ்த்துவது சற்று கடினமே. இரண்டும் வெவ்வேறு துறைகள். மின்சார வாரியத்தின் சேவைத்தரம் ஊரறிந்த ஒன்று.

தனியார் துறையுடன் மோதும் அரசு பல தியாகங்கள் செய்யவேண்டி இருக்கும், அந்த தியாகங்கள் தேர்தல் நேரத்தில் உருக்கொண்டு அரசியல் கட்சிகளை பழிவாங்கும்.

எ-கா: மிட்நைட் மாசாலாக்களை அரசு ஒளிபரப்பவில்லை என்றால் அடுத்த கட்சி அதை ஒரு தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும். ஒளிபரப்பினால் கலாச்சார சீரழிவு கூக்குரல் கேட்கும்.

இப்படியாக பல செயல்பாட்டு பிரச்சனைகள் அரசை பாடாய்படுத்தும் மற்றும் தனியார் மயத்தின் ஊழல் கரங்கள் அடுத்தடுத்து வரும் அரசாங்களை வளைத்துப் போட்டு அந்த துறையை கலைத்து விடும். தாத்தாவுக்கும் பேரனுக்குமான சண்டையில் வீணாகப் போவது மக்களின் வரிப்பணம் தான்.

')) said...

//அதுதான் சொல்லிவிட்டார்களே.. தலைக்கு மேல் கேபிள்கள் இருக்கக்கூடாது. தரைக்கு அடியில்தான் என்று.. தரைக்கு அடியில் என்றால் அது அரசினால் மட்டுமே முடியும். சுற்றி வளைத்து அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கிறது அரசுத் தரப்பு. வேறு வழியில்லை.. சுமங்கலிக்கு அரோகராதான்..//

இப்படி நான் நினைக்கவில்லை. நேற்றைக்குக்கூட அரசு தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.. கேபிள் ஆபரேட்டர்களுக்கு சாட்டிலைட் கனெக்ஷன் கொடுக்கும் MSO-க்களாக மட்டுமே அரசு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

')) said...

//Anonymous said...
இரண்டாம் சாணக்கியரே.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.. எடுத்த எடுப்பிலேயே அரசியலா..? பார்த்து நடந்துக்குங்க.. ஆனாலும் உங்களது கருத்தில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது.//

என்ன உண்மைன்னு சொல்லியிருக்கலாமே..

')) said...

//Anonymous said...
இங்கேயும் போலியா..? இரண்டாம் சாணக்கியரே.. இங்கு உண்மைத்தமிழன் என்ற பெயரில் வந்திருப்பது போலியார்.. இதுவெல்லாம் என்னவென்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.. அதை நீக்கி விடுங்கள்..//

உங்களுக்குப் பின் நெறைய மெயில்கள்.. அனைத்திலும் எச்சரிக்கை.. எச்சரிக்கை என்று இருந்தது.. ஏதோ ஒன்று என்று நினைத்துத்தான் டீலட் செய்தேன்..

')) said...

//இப்படியாக பல செயல்பாட்டு பிரச்சனைகள் அரசை பாடாய்படுத்தும் மற்றும் தனியார் மயத்தின் ஊழல் கரங்கள் அடுத்தடுத்து வரும் அரசாங்களை வளைத்துப் போட்டு அந்த துறையை கலைத்து விடும்.//

இப்படித்தான் நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்.. பதிவுக்கு நன்றி..

')) said...
This comment has been removed by a blog administrator.
')) said...

hi doondu

don't send any mail to me for does not connect this matter..